நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி

by Staff / 31-10-2023 11:31:46am
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி

நைஜீரியாவில் தாராபா மாநிலத்தின் அர்டோ-கோலா மாவட்டத்தில், நாட்டின் மிகப்பெரிய பெனு நதியில் ஒரு படகு கவிழ்ந்தது. சுமார் நூறு பேரை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 70 பேரைக் காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நைஜீரியா நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. கூட்ட நெரிசல் மற்றும் பராமரிப்பின்மை காரணமாக படகு விபத்துகள் நடைபெறுகின்றன.

 

Tags :

Share via

More stories