வெள்ளத்தால் 10 லட்சம் குடும்பங்கள் பாதிப்பு
தூத்துக்குடி முத்தம்மாள் காலனி ராஜகோபால் நகர் கதிர்வேல் நகர் பர்மா காலனி முத்தையாபுரம் அத்திமரப்பட்டி சண்முகபுரம் லயன்ஸ் டவுன் உள்பட ஏராளமான இடங்களில் சுமார் 9 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.தாழ்வான பகுதிகளில் மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றி வருகிறார்கள். இதற்காக மாநகராட்சி சார்பில் 200 மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு அடிப்படை தேவைகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி செய்து வருகிறார்.
தூத்துக்குடியில் ஐந்து நாட்களாகியும் மழைநீர் வடியாமல் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர்.மேலும் வீட்டு மொட்ட மாடிகளில் தங்கி உள்ளவர்களுக்கு விமானங்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல இடங்களில் சமையல் செய்து ஆங்காங்கே தங்கி இருக்கும் மக்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறார்கள். தூத்துக்குடியில் பெய்த கனத்த மழையால் இதுவரை 32 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.அமைச்சர்கள் கே. என். நேரு, அனிதா ஆர் ராதா கிருஷ்ணன், கீதாஜீவன் எவ. வேலு ராஜ கண்ணப்பன், சிவசங்கர் ஆகியோர் தூத்துக்குடியில் முகாமிட்டு நிவாரண பணிகளை செய்து வருகிறார்கள். மேலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தேங்கி கிடக்கும் தண்ணீரை கடலுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்
Tags :