கணவனை அண்ணனோடுசேர்ந்து அடித்து கொடூரமாக கொலைசெய்து நாடாகாமடிய மனைவி கைது.

தென்காசி மாவட்டம் தென்காசி பகுதியைச் சார்ந்தவர் வீரபாலன் இவரது மகன் சின்னதுரை இவர்பிரானூர் பார்டரிலுள்ள உள்ள தனியார் மர அறுவை ஆலையில் பணியாற்றும் பொழுது செங்கோட்டை அருகில் உள்ள புதூர் பகுதியைச் சார்ந்த மாயா என்பவரை காதலித்து இருவரும் கலப்புத் திருமணம் செய்து கொண்டதை தொடர்ந்து இவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மர அறுவை ஆளுகளுக்கு கணவனும் மனைவியாக சேர்ந்து பணியாற்ற சென்றதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை உள்ளனர்.திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாயா தனது தாய் வசிக்கும் புதூரில் தனி வீடு பார்த்து அங்கு வந்து தங்கி இருந்து வருகிறார். அவரது கணவர் சின்னத்துரை என்கின்ற துரை ராமேஸ்வரத்தில் தனியார் மர அறுவை அருகில் பணியாற்றி வருகிறார் ஆண்டுக்கு சில நாட்கள் மட்டுமே இங்கு வந்து செல்லும் அவர் வீட்டிற்கு தேவையான பணத்தை அனுப்பி வைப்பதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் மனைவி மாயா மகளிர் குழுவில் கடன் வாங்குவதற்காக கணவரை வரவழைத்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் நான்காம் தேதி இரவு வெள்ளிக்கிழமை அன்று கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தனது கணவரை யாரோ அடித்து தாக்கி வீட்டு வாசலில் போட்டு விட்டதாக கூறி அவரை தெற்கு மேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோவில் வைத்து சின்ன துறையின் சகோதரி கலா பாவூர்சத்திரம் அருகே உள்ள மேல மெஞ்ஞானபுரம் பகுதியில் வசித்து வருகிறார் அவரது வீட்டிற்கு ஆட்டோவில் காயங்களுடன் உயிரெற்றுக் கிடந்த உடலை ஆட்டோவில் கொண்டு சென்றதாக கூறப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக கலா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் எதற்கு இங்கே கொண்டு வந்தீர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லலாம் என்று கூறவே உங்கள் தம்பியை யாரோ கொலை செய்து விட்டார்கள் என்று கூறவே அவருக்கு சந்தோகம் வலுக்கவே செங்கோட்டைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக செங்கோட்டைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில் சின்ன துரையின் சாவில் மர்மம் இருப்பது கண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சின்ன துரையை அவரது மனைவி மாயாவும், அவரது சகோதரர் மனோ என்பவரும் சேர்ந்து கம்பியால் அடித்து படுகொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது, இதன் தொடர்ச்சியாக இவர்கள் கொலை செய்ததை மறைப்பதற்காக தெற்கு மேட்டை சேர்ந்த ஒருவரது ஆட்டோவில் சுமார் ஐந்து மணி நேரமாக கொலை செய்யப்பட்டவரின் உடலை வைத்து பல்வேறு பகுதிகளில் சுற்றிவந்து நாடகம் ஆடியதும் வெளிச்சத்திற்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக மாயாவையும் அவரது சகோதரர் மனுவையும் புலியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாயா எதற்காக கணவனை கொலை செய்தார் வெளியூரில் தங்கி இருந்து வேலை பார்த்து வரும் சின்னத்துறையை மகளிர் குழு கடன் வாங்குவதற்காக வரவழைத்து மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோர் கொலை செய்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட சின்ன துறையின் சகோதரர் கண்ணன் தெரிவிக்கும்போது இருவரும் காதலித்து கலப்புத் திருமணம் செய்து 15 ஆண்டுகள் கழித்து எனது தம்பியை அவரது மனைவி மற்றும் அவரின் சகோதரன்சேர்ந்து கொலை செய்வதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் இருப்பதாக தெரிவித்தார் மேலும் இந்த கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கட்ட கோலங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : கணவனை அண்ணனோடுசேர்ந்து அடித்து கொடூரமாக கொலைசெய்து நாடாகாமடிய மனைவி கைது.