மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன் ரத்து - உச்ச நீதிமன்றம்

by Staff / 18-04-2022 01:05:46pm
மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன் ரத்து - உச்ச நீதிமன்றம்


வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் உள்ளே புகுந்து விபத்தை ஏற்படுத்தியதில் நான்கு விவசாயிகள் மரணம் அடைந்தனர். அதன்பிறகு ஏற்பட்ட வன்முறை சம்பத்தில் மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் ஆசிஷ் மிஸ்ரா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்தான் முக்கிய குற்றவாளி என்ற கோணத்தில் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தேர்தல் முடிவுகள் வந்த சமயத்தில் அவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

தேர்தல் வெற்றியையொட்டி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை ஆசிஷ் மிஸ்ரா தனது ஆட்களுடன் சென்று மிரட்டியதாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையில் விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், ஆசிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ததுடன் ஒரு வாரத்திற்குள் அவர் சரணடைய வேண்டும் என்ற காலக்கெடுவையும் விதித்திருக்கிறது

 

Tags :

Share via