ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது
சென்னை பெரம்பூரில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது. வழி நெடுக தொண்டர்களும், பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பௌத்த முறைப்படி இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடம் அவரது உறவினரான காஞ்சனா தேவி என்பவருக்கு சொந்தமான இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :

















.jpg)

