கேரளாவில் டீசல் விலை அதிகரிப்பால் தமிழக எல்லையில் குவியும் வாகனங்கள்

by Staff / 13-04-2023 04:42:56pm
கேரளாவில் டீசல் விலை அதிகரிப்பால் தமிழக எல்லையில் குவியும் வாகனங்கள்

கேரள மாநிலத்தில் டீசல் விலை உயர்வு காரணமாக தமிழக எல்லையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் வாகன ஓட்டிகளில் கூட்டம் தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புலியறை வழியாக தினமும் கேரள மாநிலத்திற்கு 500க்கும் மேற்பட்ட கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களும் இன்னபிற சரக்குகள் எடுத்துச் செல்லும் வாகனங்களும் சென்று வருகின்றன 24 மணி நேரமும் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் புலியரை வழியாக கேரள மாநிலத்திற்கு சென்று வருகின்றது இந்த நிலையில் கேரள மாநிலத்தில் டீசல் விலை 97 ரூபாய் 89 காசு வரை தற்பொழுது புனலூர் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது இதன் காரணமாக தமிழகத்திலிருந்து கேரளா கேரள மாநிலத்திற்கு சரக்குகள் ஏற்றிச்செல்லும் தமிழக வாகனங்கள் தமிழகத்திலேயே டீசல் நிரம்பிச் செல்கின்றன இதே போன்று கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கனிம வளங்கள் ஏற்றவரும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் புலியறை பகுதிகளில் டீசல் விலை மூன்று ரூபாய் குறைவாக இருப்பதால் புலியரை செங்கோட்டை பிரானூர் பார்டர் ஆகிய பகுதிகளில் தங்களது வாகனங்களுக்கு டீசல் நிரம்பி செல்கின்றனர் ஒரு லாரிக்கு குறைந்தபட்சம் 300 லிட்டர் டீசல் நிரப்ப வேண்டிய நிலை உள்ளதால் ஆயிரம் ரூபாய் ஒரு நாளைக்கு டீசல் மிச்சம் கிடைப்பதாக லாரி ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர் கேரள மாநிலத்தில் மாநில அரசின் வரி கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளதால் டீசல் விற்பனை அங்கு மந்தமடைந்துள்ளதாகவும் கனரக வாகனங்கள் தமிழகத்தில் டீசல் நிரம்பி செல்வதால் எல்லைப்புற பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via