ஆட்டோவில் சென்ற பள்ளி மாணவியிடம் சில்மிஷம்

by Staff / 04-11-2023 11:50:44am
ஆட்டோவில் சென்ற பள்ளி மாணவியிடம் சில்மிஷம்

சென்னை ராயபுரம் பகுதியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் கடந்த அக்டோபர் 30ம் தேதி பள்ளி முடிந்து ஷேர் ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், ஆட்டோவில் தனியாக சென்ற பள்ளி மாணவியிடம் ஆட்டோ ஓட்டுனர் ஆபாசமாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்ததில் பழைய வண்ணாரப்பேட்டை அம்மையப்பன் தெருவை சேர்ந்த ஓட்டுநர் பாஸ்கரன் என்பவர் மாணவியிடம் ஆபாசமாக பேசியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories