ஓடாத கோவில் தேர்களை ஓட வைத்தவர் முதல்வர் - அமைச்சர் சேகர்பாபு

by Staff / 12-01-2023 03:12:28pm
ஓடாத கோவில் தேர்களை ஓட வைத்தவர் முதல்வர் - அமைச்சர் சேகர்பாபு

பழனி கோவிலில் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக பத்திரிகை முழுக்க, முழுக்க தமிழில் அச்சிடப்பட்டுள்ளதாகவும், தமிழின் பெருமையை பறைசாற்றும் வகையில் 108 ஓதுவார்கள் வேத மத்திரங்களை முழங்க உள்ளதாகவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு ஓடாத தேரையெல்லாம் ஓட வைத்துள்ளார். திருவாரூர் தேரை ஓடவைத்த பெருமை தலைவர் கருணாநிதியையே சேரும். நமது முதல்வர் திருத்தணியில் 12 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேரையும், ராமநாதபுரம் ராமநாதசாமி கோவிலில் 18 ஆண்டுகள் ஓடாத தேரையும் ஓடவைத்து பெருமை சேர்த்தவர் என்றார்.

 

Tags :

Share via

More stories