தமிழ்நாடு உள்பட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
தமிழ் நாடுஉள்பட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதியும் வேட்பு மனு தாக்கல் முடிவு ஆறாம் தேதியும் வேட்பு மனு பரிசீலனை ஏற்பளி ஏழாம் தேதியும் வேட்பு மனு பெற ஏப்ரல் ஒன்பதாம் தேதியும் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாலாம் தேதியும் நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெறுகிறது
தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதி அமிலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதி என்பது தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்காக இந்திய ஆணையத்தால் வகுக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின் தொகுப்பாகும். தேதி அறிவிக்கப்பட்ட அந்த நிமிடத்தில் இருந்தே இது உடனடியாக அமலுக்கு வந்து விடுகிறது. 2026 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்வு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. ஆளும் அரசு புதிய திட்டங்களை அறிவிக்கவோ ,புதிய சலுகைகளை வழங்கவோ நிதியை ஒதுக்க கூடாது. அரசு அலுவலகங்கள் அல்லது பொது இடங்களில் ஆளுங்கட்சி தலைவர்களின், புகைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் சிலைகள் மறைக்கப்பட வேண்டும். மதம் அல்லது மொழி ரீதியாக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதோ அல்லது வாக்கு சேகரிக்கவோ கூடாது .அமைச்சர்கள் அல்லது அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்திற்காக அரசு வாகனங்களையோ அல்லது அரசு இயந்திரங்களையோ பயன்படுத்தக் கூடாது .வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசு பொருள்கள் வழங்குவது சட்டப்படி குற்றமாகும்.50,000 மேல் ரொக்க பணம் கொண்டு செல்லவும் கட்டுப்பாடுகள் உள்ளன. பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கு காவல்துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும் .வாக்குப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக அனைத்து பிரச்சாரங்களும் நிறுத்தப்பட வேண்டும் .மற்ற கட்சிகளை விமர்சிக்கும் போது அவர்களின் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளை மட்டுமே விமர்சிக்க வேண்டும். தனிநபர் விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் .இந்த விதிகள் மேலும் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் .
Tags :



















