சென்னை மாநகராட்சியில் ஆறு பேர் லஞ்சம், நிதி முறைகேடு, வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய புகார்களின் அடிப்படையில் பணி இடை நீக்கம்

by Admin / 17-07-2026 02:58:06am
சென்னை மாநகராட்சியில்  ஆறு பேர் லஞ்சம், நிதி முறைகேடு, வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய புகார்களின் அடிப்படையில் பணி இடை நீக்கம்

சென்னை மாநகராட்சியில் 4 உயர் அதிகாரி உள்பட ஆறு பேர் லஞ்சம் நிதி முறைகேடு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய புகார்களின் அடிப்படையில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றதுடன் போலி ரசீதுகளை சமர்ப்பித்து பொது பணத்தை தவறாக பயன்படுத்தியது முறையான அனுமதி பெற்ற கட்டிட உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்றது உட்பட்ட காரணங்களினால் ஆறு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகராட்சி ஆணையர் ஜி எஸ் ஜமீரன் பிறப்பித்துள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களில் டாக்டர் தேவிகளா மணலி மற்றும் மாதவரம் மண்டல சுகாதாரத்துறை அதிகாரியாக இருந்த இவர் 9 லட்சம் மருத்துவ உபகரணங்களுக்கு போலி பில் சமர்ப்பித்த குற்றச்சாட்டின் கீழ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் சிவ பொருக்கோடி செனாய் நகர் மண்டல மூத்த பூச்சியில் வல்லுநர் இளைஞரிடம் வேலை வாங்கி தருவதாக ஆறு லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் ஆனந்தராவ் மாதவரம் மண்டல உதவி செயற்பொறியாளர் ஆன இவர் கட்டட உரிமையாளர்களிடம் 2.5 லட்சம் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலும் பாஸ்டர் கோடம்பாக்கம் மண்டல சாலை பணியாளர் ரூபாய் 50000 லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலும் கண்ணன் என்கிற துர்க்கார் ராயபுரம் மண்டலத்தில் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலும் பணியிடை நீக்கும் செய்யப்பட்டுள்ளனர்.பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நாள் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஆணையர் உத்தரவு பெற்றுள்ளார்.

 

Tags :

Share via
Logo