உலகின் மிக வயதான கோடீஸ்வரர் ஜார்ஜ் ஜோசப்

by Staff / 01-07-2024 03:15:27pm
உலகின் மிக வயதான கோடீஸ்வரர் ஜார்ஜ் ஜோசப்

ஃபோர்ப்ஸ் பில்லியனர் பட்டியல் 2024-ன் படி, 102 வயதான ஜார்ஜ் ஜோசப் தற்போது உலகின் மிக வயதான பில்லியனர் ஆவார். லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட மெர்குரி ஜெனரல் கார்ப்பரேஷன் என்ற காப்பீட்டு நிறுவனத்தை நிறுவிய அமெரிக்க தொழிலதிபராவார். இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் $4.6 பில்லியன் என கூறப்படுகிறது. அவர் 1962-ல் $2 மில்லியன் ஆரம்ப மூலதனத்துடன் இந்த நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். தற்போது உலகின் மிக வயதான கோடீஸ்வரராக இருக்கும் அவரது சொத்து மதிப்பு $1.7 பில்லியன் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via