மாநில கல்விக் கொள்கை அறிக்கை: பிற அம்சங்கள்

by Staff / 01-07-2024 03:27:10pm
மாநில கல்விக் கொள்கை அறிக்கை: பிற அம்சங்கள்

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாநில கல்வி கொள்கையை உருவாக்க முதலமைச்சர் அமைத்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக ஸ்போக்கன் இங்கிலீஷ் தவிர ஸ்போக்கன் தமிழ் மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத் தேர்வுகள் நடத்தக்கூடாது. நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள், தனியார் கல்வி மையங்களை விளம்பரப்படுத்துவதை தடை செய்யப்பட வேண்டும். உயர்கல்வி வகுப்புகளின் தேர்வுகளை புத்தகத்தின் உதவி கொண்டு எழுதுவதை அனுமதிக்கலாம் போன்ற அறிவுரைகள் இடம் பெற்றுள்ளன
 

 

Tags :

Share via

More stories