தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

by Staff / 17-06-2024 12:04:12pm
தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்து தென்மேற்குப் பருவக்காற்று வீசத் தொடங்கி இருப்பதால் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கடந்த சில நாட்களாக வெப்பமும் குறைவாகவே இருந்தது. ஆனால், அடுத்த வரும் 4 நாட்களுக்கு வெப்பம் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், வளிமண்டல சுழற்சிக் காரணமாக சில இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via