நீட் முறைகேடு: தலைக்கு ரூ.30 லட்சம்.. வெளியான தகவல்

by Staff / 17-06-2024 11:54:15am
நீட் முறைகேடு: தலைக்கு ரூ.30 லட்சம்.. வெளியான தகவல்

பீகாரில் நீட் தேர்வு முறைகேட்டில் 4 மாணவர்கள், 13 பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தேர்வுக்கு முன்தினம் வினாத்தாள் மற்றும் விடைகள் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாணவரிடம் இருந்து தலா ரூ.30 லட்சம் வரை பெறப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர்களது அறையில் பாதி எரிந்த நிலையில் வினாத்தாள்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via