சென்னை ஐ.ஐ.டி. விரிவுரையாளர் தற்கொலை

by Editor / 02-07-2021 05:10:31pm
 சென்னை ஐ.ஐ.டி. விரிவுரையாளர் தற்கொலை


சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் விரிவுரையாளர் ஒருவரின் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலை கைப்பற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இறந்தவர் பெயர்:உன்னி கிருஷ்ணன். கொச்சி யைச் சேர்ந்தவர். விரிவுரையாளராக இருப்பவர். அதே நேரம் திட்ட ஒருங்கிணை பாளராகவும் பணியாற்றி வந்திருப்பவர்.
ஐஐடி வளாகத்தில் ஹாக்கி மைதானத்திற்கு அருகில் உள்ள புதர் ஒன்றிலிருந்த இவரின் உடலை பாதி எரிந்து போன நிலையில் சுமார் 8 மணியளவில் மாணவர்கள் சிலர் பார்த்திருக்கிறார்கள். அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே கோட்டூர்புரம் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து கோட்டூர்புரம் போலீஸார் கூறுகையில், "கைப்பற்ற பட்டுள்ள உடலில் முக பகுதியில் எந்த வித தீக்காயங்களும் இல்லை. மற்ற பகுதிகள் பாதி எரிந்து காணப்படுகிறது. சந்தேகப்படும் படியான பொருள்கள் எதுவும் அருகில் இல்லை. விசாரணையைத் தொடங்கியிருக்கிறோம்" என்றனர்.
தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் சிக்கி உள்ளது. மன அழுத்தத்தால் இவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) இவரின் தந்தை விஞ்ஞானியாக பணியில் இருக்கிறார். இந்த நிலையில் இறந்தவர் ஒப்பந்த பணியாளர் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories