தி௫குற்றாலம் சித்ரா நதி (குற்றால அ௫வி) தீப ஆராத்தி பெ௫விழா

by Admin / 21-07-2023 08:23:22pm
தி௫குற்றாலம் சித்ரா நதி (குற்றால அ௫வி) தீப ஆராத்தி பெ௫விழா

 தென்காசி மாவட்டம் தி௫குற்றாலம் சித்ரா நதி (குற்றால அ௫வி) தீப ஆராத்தி பெ௫விழா 2023 கோலாகலமாக துவங்கியது. 

 *அகில பாரதீய விஸ்வகர்ம ஜகத்கு௫ ஸ்ரீலஸ்ரீ புத்தாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் ஸ்ரீராஜராஜேஸ்வரி பீடம் 39 வதுகு௫ மகாசன்னிதானம் ஸ்ரீமத் பரசமய கோளரிநாத ஆதீனம் தி௫நெல்வேலி* அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி ஆசியுரை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் சுவாமி வேதானந்தா சுவாமி ராமானந்தா அகில பாரத சன்னியாசி சங்கம் மற்றும் சாதுகள் சன்னியாசிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

அகிலபாரதீய சந்யாசிகள் சங்கத்தின் சார்பில்விடுக்கப்பட்டுள்ள அழைப்பில்,, குற்றாலத்தில் வரும் ஜூலை 21, 22, 23  ஆகிய மூன்று தினங்கள் ஆன்மீக மாநாடு சித்ரா நதிக்கு ஆர்த்தி விழாவும் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஆடவல்லானாகிய நடராஜபெருமானுக்கு ஐந்து திருச்சபைகள் உண்டு தலைமைபதி சிதம்பரம் பொற்சபை  மதுரை வெள்ளிஅம்பலம் திருநெல்வேலி தாமிரசபை  குற்றாலம் சித்திரசபை திருவாலங்காடு ரத்தினசபை இப்படி சிறப்பமைந்த குற்றாலம்   சித்ரசபை என்பதால் சித்ராநதியாக தாமிரபரணியின் மற்றொரு தோற்றம் அருவியின் அற்புதமான சிவ மூர்த்திகள் யார்விரும்புகிறார்களோ இல்லையோ அங்கு ஸ்னானம் செய்பவர்கள் சிவனின் அபிஷேக தீர்த்தத்தில் தான் நீராடுகிறார்கள் இயற்கையோடு கூடிய வழிபாடு இதை யாராலும் அழிக்க முடியாது அதன் சகாயம் இல்லாமல் வாழமுடியாது ..

 சனாதன தர்மத்தின் சூரியன் சூரியபகவான்  மழை வருணன் வருணபகவான் காற்று வாயுபகவான் நிலம் பூமாதேவி நெருப்பு அக்னிபகவான் ஆகாயம் ஆடவல்லானாகிய நடராஜபெருமான் ஜீவ ஒடுக்கமும் விரிவும் அங்குதான். எனவே உலகத்தில் பிரத்யட்ச தேவதைகள் நேரில் கண்டு வணங்க கூடிய தெய்வங்கள் என சனாதன தர்மமாகிய இந்துமதம் இயற்கையோடு இணைந்தது நாம் ஒப்புயர்வற்ற தர்மத்தை சார்ந்தவர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம்.. குற்றாலத்திற்கு வாருங்கள்.

தி௫குற்றாலம் சித்ரா நதி (குற்றால அ௫வி) தீப ஆராத்தி பெ௫விழா
 

Tags :

Share via