இன்று கவனமாக போங்க-வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழ்நாட்டில் இன்று இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை நெருங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் 21ஆம் தேதி வறண்ட வானிலை நிலவும் எனவும், ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என கூறியுள்ளது. எனினும், காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tags : இன்று கவனமாக போங்க-வானிலை ஆய்வு மையம் தகவல்.