ஆதாரமில்லாமல் பழி சுமத்தினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்... சீனா எச்சரிக்கை

by Admin / 26-08-2021 01:12:55pm
ஆதாரமில்லாமல் பழி சுமத்தினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்... சீனா எச்சரிக்கை

கொரோனா தொற்றின் தோற்றம் குறித்து சீனா மீது அமெரிக்காஆதாரமில்லாமல் பழி சுமத்தினால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சீனாவில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா எப்படி உருவானது என்பது குறித்த அமெரிக்க உளவுத்துறையின் விசாரணை நிறைவுற்று விசாரணை அறிக்கையானது வெள்ளை மாளிகையில் சமர்பிக்கப்பட்டுவிட்டதாகவும் விரைவில் உலகுக்கு அறிவிக்கப்படும் எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

கொரோனா விவகாரத்தில் ஆரம்பம் முதல் சீனாவை அமெரிக்கா குற்றம்சாட்டி வரும் நிலையில் கொரோனா தோற்றம் குறித்த அறிக்கையை உலக நாடுகள் எதிர்பார்த்துள்ளனர்.
 
இந்நிலையில் கொரோனா தோற்றம் குறித்த ஆராய்ச்சியை அமெரிக்கா அரசியலாக்குவதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. சீனா மீது அமெரிக்கா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினால், அதற்கான எதிர் தாக்குதலை சமாளிக்க அமெரிக்கா  தயாராக இருக்க வேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via