இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் மீது தாக்குதல்
மும்பையில் பெண் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று (ஆக., 18) அதிகாலையில் சியோன் மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த பெண் மருத்துவரை, குடிபோதையில் இருந்த சிலர் தாக்கியுள்ளனர். பெண் மருத்துவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றபோது காயமடைந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து, நோயாளியும், அவருடன் வந்தவர்களும் தப்பியோடினர்.
Tags :