13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சர்வதேச பட்டம் விடும் திருவிழா

by Editor / 10-08-2022 11:42:20pm
 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சர்வதேச பட்டம் விடும் திருவிழா

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில் ''சர்வதேச பட்டம் விடும் திருவிழா'' சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்டப்பல்வேறு நாடுகளை சார்ந்த சுமார் 100 குழுக்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இந்த திருவிழாவில் பலூன் வடிவில் இருக்கும் பல்வேறு விலங்குகள், மீன்கள் மற்றும் பறவைகள் வடிவிலான பட்டங்கள் பறக்கவிடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக விற்கப்படும். வெளிநாடுகளில் ஆண்டுதோறும் கொண்டாடப்படக்கூடிய இந்த திருவிழா இந்தியாவில் குஜராத், கர்நாடகா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கொண்டாடப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.

 

Tags : International Kite Flying Festival from 13th to 15th

Share via