மதுரை அருகே கண்மாயில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

by Editor / 16-10-2021 04:15:26pm
மதுரை அருகே கண்மாயில் மூழ்கி 2 சிறுமிகள் பலி


மதுரை அருகே கண்மாயில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமர். இவரது மகள் ஆண்டிச்சி (14). இவர் அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த அய்யனார் மகள் சவிதா (11). இவர் மேலூரில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். தோழிகளான இருவரும் அதே பகுதியை சேர்ந்த பெண்களுடன் கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றனர்.


தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிறுமிகள் ஆண்டிச்சி, சவிதா ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, நீச்சல் தெரியாததல் இருவரும் பரிதாபமாக தண்ணீருக்குள் மூழ்கினர். சிறுமிகள் மாயமானதை கண்ட அங்கிருந்த பெண்கள் தண்ணீருக்குள் இறங்கி தேடினர். அப்போது, சிறுமிகள் இருவரும் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு, மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஆண்டிச்சி, சவிதா ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

 

Tags :

Share via
Logo