13 தாலிபான்கள் உயிரிழப்பு

by Admin / 02-09-2021 04:09:52pm
13 தாலிபான்கள் உயிரிழப்பு

 

பஞ்ஷீரில் தாலிபான்களுக்கு எதிராக தொடர் தாக்குதலை நடத்தி வரும் தேசிய முற்போக்கு எதிர்ப்பு படையினர், 13 தாலிபான்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளனர்.

 ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து,   மக்கள் வெளியேறி வருகின்றனர்.  நாட்டை மீட்கும் முயற்சியில் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே தலைமையில் தேசிய முற்போக்கு படையினர் தாலிபான்களை எதிர்த்து போரிட்டு வருகின்றனர்.

  கடந்த 3 நாட்களாக நடந்த தாக்குதலில் இரு தரப்பிலிருந்தும் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  சிக்ரினவ் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 13 தாலிபான்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான டேங்கர் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக  எதிர்ப்பு படை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories