கரூர் வெள்ளியணை பகுதியில் தனியாா் கல்லூரி பஸ் மீது சரக்கு ரயில் மோதி18 மாணவர்கள் காயம்
இன்று மாலை கரூர் வெள்ளியணை பகுதியில் ஒரு தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 18 மாணவ மாணவிகள் காயம் அடைந்துள்ளனர். தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து மாணவர்களை ஏற்றுக் கொண்டு ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக பேருந்து தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது அந்த நேரத்தில் புலியூரில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு ஜல்லி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் பெருந்தின் மீது மோதியதால் பேருந்து சேதமடைந்ததோடு விபத்தில் 18 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :


















