12 ஆண்டுகளில் 16 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமை துறப்பு

by Staff / 10-02-2023 12:28:41pm
12 ஆண்டுகளில் 16 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமை துறப்பு

2011ஆம் ஆண்டு முதல் இதுவரை 16 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், 2022 ஆம் ஆண்டில் மட்டும் 2,25,620 பேர் இந்திய குடியுரிமையை கைவிட்டனர். 2011 முதல் 2022 வரை 16 லட்சம் (16,63,440) பேர் குடியுரிமையை துறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியர்கள் குடியுரிமை பெற்ற 135 நாடுகளின் பட்டியலையும் மத்திய அமைச்சர் விளக்கினார்.

 

Tags :

Share via

More stories