கோவில்பட்டி அருகே கார் விபத்து - தின பூமி பத்திரிகை உரிமையாளர் மணிமாறன் உயிரிழப்பு

by Editor / 14-10-2024 08:04:52pm
கோவில்பட்டி அருகே கார் விபத்து - தின பூமி பத்திரிகை உரிமையாளர் மணிமாறன் உயிரிழப்பு

நெல்லையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற கார் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர்  தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் உள்ள தடுப்பூச்சுவரில் மோதி, கண்டெய்னரில் மோதி விபத்து . காரில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த தின பூமி பத்திரிகை உரிமையாளர் மணிமாறன் பலியானார். அவருடன் வந்த அவரது மகன் ரமேஷ் படுகாயங்களுடன் கோவில்பட்டியில் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார் இது குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்த மணிமாறனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தினபூமி, அதிர்ஷ்டம்* ஆகிய நாளிதழ்களின் முதன்மை செய்தி ஆசிரியராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவரும், எண்ணற்ற பத்திரிக்கையாளர்களை உருவாக்கியவரும், மதுரை தின பூமி நாளிதழில்  முதன்மை செய்தி ஆசிரியராக பணியாற்றிய .திருநாவுக்கரசு  இன்று அதிகாலை தோவாளையில் உடல் நலக்குறைவால் காலமானார்.  அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 5 மணி அளவில் தோவாளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு ஊர் திரும்பிய தினபூமி உரிமையாளர் .மணிமாறன் கார் விபத்துக்குள்ளாகி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது கூடுதல் சோகம்.

 

Tags : கோவில்பட்டி அருகே கார் விபத்து - தின பூமி பத்திரிகை உரிமையாளர் மணிமாறன் உயிரிழப்பு

Share via