சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

by Editor / 15-10-2024 08:34:00am
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. இன்று மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுவடையும் என்றும், தாழ்வு மண்டலமாக வலுவடைந்து தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா கடற்கரை நோக்கி வரும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் அடுத்து 3 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் இன்று தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கனமழை எச்சரிக்கையை அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை மேற்கொண்டார். அப்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அறிவித்தார். இந்த மாவட்டங்களில் அதி கனமழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டது.

 

Tags : சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

Share via