by Staff /
12-07-2023
03:17:58pm
ஓடுபாதையில் தரையிறங்கும் போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவின் மொகடிஷுவில் உள்ள ஏடன் அடே சர்வதேச விமான நிலையத்தில் நேற்று 12 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 30 பயணிகளுடன் ஹல்லா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியது. சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். விபத்து தொடர்பான காட்சிகள் வெளயாகியுள்ளன.
Tags :
Share via