ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தல 5000 ரூபாய் வழங்க வேண்டும்- அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி

by Admin / 22-12-2025 05:19:12pm
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தல 5000 ரூபாய் வழங்க வேண்டும்- அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி

சேலத்தில் இன்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி செய்தியாளர்களிடம், வரும் 2026 ஆம் ஆண்டு தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாட ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தல 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு 2,500 ரூபாய் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர் தற்போது விலைவாசி உயர்ந்துள்ளதால் 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ரொக்க பணத்துடன் சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகையும் தடையின்றி வழங்குமாறு கேட்டுக் கொண்டாா். கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது 5,000 கேட்டாா். இப்போது, அவர் முதல்வராக இருப்பதால் அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளார். அத்துடன், பொங்கல் தொகுப்பிற்கான கரும்புகளை இடைத்தரகர்கள் இன்றிவிவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் . தற்போது தமிழக அரசு 3000 வரை ரொக்கம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி 5,000 ரூபாய் கோரிக்கை வைத்துள்ளது பேசு பொருளாக மாறி உள்ளது.

 

Tags :

Share via