அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் மின்னணு முறையில் கையொழுத்திட்டனா்.
பிரான்சின் எவியன் நகரில் நடைபெற்ற -ஜி7உச்சி மாநாட்டின் நிறைவைத் தொடர்ந்து, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஏற்பாடு செய்திருந்த வெர்சாய் அரண்மனை இரவு விருந்தின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெர்சாய் அரண்மனையில் இருந்தபடியும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் டெஹ்ரானில் இருந்தும் மின்னணு முறையில் கையொழுத்திட்டனா்.
இரு நாடுகளுக்கும் இடையே சில மாதங்களாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
14 அம்ச ஒப்பந்தத்தின் முக்கிய புள்ளிகள் போர் நிறுத்தம்: லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்படும்
சர்வதேச வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான மற்றும் கட்டணமற்ற போக்குவரத்திற்காக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாகத் திறக்கும்.
ஈரான் துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையை அமெரிக்கா உடனடியாக விலக்கிக் கொள்ளும்.
இரு நாடுகளும் அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி மற்றும் நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை எட்ட பேச்சுவார்த்தை நடத்தும்.
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கவோ அல்லது வாங்கவோ மாட்டாது என உறுதி அளித்துள்ளது. அதன் செறிவூட்டப்பட்ட யுரேனியம் சர்வதேச அணுசக்தி முகமையின் மேற்பார்வையில் அந்தந்த இடங்களிலேயே வீரியம் குறைக்கப்படும்.
ஈரானின் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக பிராந்திய நாடுகளின் பங்களிப்புடன் 300 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவித் திட்டம் உருவாக்கப்படும். மேலும், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள் விடுவிக்கப்பட்டு, படிப்படியாக பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும்
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதை அமெரிக்க வெள்ளை மாளிகையும், ஈரானிய வெளியுறவு அமைச்சகமும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன
Tags :



















