காதலி இறந்த துக்கத்தில் 16 வயது காதலன் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டு தற்கொலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சாயமலை மடத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் (கபிலன் என்ற ரவிசேகர்) நேற்று மதியம் வாட்சப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கபிலன் என்ற ரவிசேகர் கூறியிருப்பதாவது "என் காதலி இறந்துவிட்டாள் அதனால் நானும் தற்கொலை செய்து கொள்ள போகிறேன், என் காதலியை எரித்த அதே இடத்தில் என்னையும் எரித்துவிடுங்கள்" என கண்ணீர் மல்க கூறியுள்ளார். பின்னர் கபிலன் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்...
ஆனால் இந்த சம்பவம் குறித்து கபிலனின் தாயார் மற்றும் உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை எரிக்க முயற்ச்சித்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கபிலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்தும் தேவர்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :