எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை

by Staff / 13-02-2024 02:31:05pm
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து நீக்கிய பிறகு எதிர்க்கட்சி துணை தலைவர் பதவிக்கு ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டு சட்டமன்ற பேரவை தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கைக்கு அருகில் துணைத்தலைவர் இருக்கை இருக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சபாநாயகர் காலம் தாழ்த்தி வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகர் அப்பாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.
 

 

Tags :

Share via

More stories