ஐபிஎல்: சென்னை வந்தடைந்தார் தோனி

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி சென்னை வந்தடைந்தார். ஐபிஎல் 18ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் நேற்று முதலே சென்னைக்கு வரத் தொடங்கிய நிலையில், இன்று(பிப்.26) தோனியும் வந்துள்ளார். 43 வயதான தோனியை சென்னை அணி ஏலத்தில் விடாமல் ரூ.4 கோடிக்கு தக்கவைத்தது. தோனி தலைமையில் சிஎஸ்கே 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :