4 பேர் கொலை; தப்பிச்செல்ல முயன்ற குற்றவாளியின் காலுக்கு மாவு கட்டு.

திருப்பூர் மாவட்ட பல்லடம் கள்ளக்கிணறு அருகே 4 பேர் கொடூரமாக கொலை செய்த வழக்கில்
திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் அருகே பத்தல் மேட்டில் முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் தேடி வருகின்றனர்.மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய செல்லமுத்து என்ற குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளனர்.போலீசாரிடம் அரிவாள்கள் இருக்கும் இடத்தை காட்ட அழைத்து சென்ற இடத்தில் தப்பி செல்ல முயன்ற போது, வலது கால் உடைந்த நிலையில் அவரை பல்லடம் மருத்துவமனை அழைத்து வந்து முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags :