குடிநீர் பணியாளருக்கு கொலை மிரட்டல்; 3 சிறுவர்கள் கைது

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள அப்புப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி (வயது 67), பேரூராட்சி குடிநீர் பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று இரவு, மூன்று சிறுவர்கள் ரங்கசாமியின் வீட்டு அருகே தகாத வார்த்தைகளால் திட்டி கூச்சலிட்டுள்ளனர். இதனை ரங்கசாமி தட்டிக் கேட்டபோது, ஆத்திரமடைந்த சிறுவர்கள் அவரை தாக்கியதுடன், பல்லை உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், கீழே தள்ளி மிதித்துள்ளனர். ரங்கசாமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அவர்கள் வருவதைக் கண்டதும், சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று அந்த 3 சிறுவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :