அமைச்சர் பொன்முடிமீது சேற்றை வாரி இறைத்தது நியாயமானதாக இல்லை- இயக்குனர் தங்கர் பச்சான் 

by Editor / 04-12-2024 09:53:27pm
அமைச்சர் பொன்முடிமீது சேற்றை வாரி இறைத்தது நியாயமானதாக இல்லை- இயக்குனர் தங்கர் பச்சான் 

கடலூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்த பகுதிகளான செம்மண்டலம், தாழங்குடா, கண்டக்காடு உள்ளிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த இயக்குனர் தங்கர் பச்சான் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:

மக்களின்வரிப்பணத்தை எடுத்து கொள்ளையடிப்பவர்கள் அனைவரும் கொலைகாரர்கள்தான். 2ஆயிரம், 6ஆயிரம் என எவ்வளவு நாள்தான் நிவாரணம் அளித்து மக்களை ஏமாற்ற போகிறீர்கள். அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்தது நியாயமானதாக இல்லை. ஆனால் அது மக்கள் கோபத்தின் வெளிப்பாடு. சேற்றை வாரி இறைத்தவர்கள் மண்ணில் உழைத்த விவசாயிகளகாகத் தான் இருப்பார்கள் “ என தங்கர் பச்சான் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் நலத்திட்டங்கள் உதவிகள் குறித்து செய்தியாளர்களி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், விஜய் வெளியில் வந்து மக்களுக்கு நல்லது செய்ய இதுவே சரியான தருணம் என தெரிவித்தார்.

 

Tags : அமைச்சர் பொன்முடிமீது சேற்றை வாரி இறைத்தது நியாயமானதாக இல்லை- இயக்குனர் தங்கர் பச்சான் 

Share via