தனிநபர் வருமானம் ரூ. 1. 66 லட்சமாக உயர்வு: தங்கம் தென்னரசு

by Staff / 28-08-2023 01:19:43pm
தனிநபர் வருமானம் ரூ. 1. 66 லட்சமாக உயர்வு: தங்கம் தென்னரசு

2022-23 ஆண்டில் தமிழகத்தில் தனிநபர் வருமானம் 1 லட்சத்து 66 ஆயிரத்து 727 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. ஒன்றிய அளவில் 2022-23ல் 98 ஆயிரத்து 374 ஆக உள்ளது என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "விலைவாசி உயர்வை எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் குறைவாக இருக்கிறது. 2021-22ல் இங்கு பணவீக்கம் 7. 92 சதவீதமாகவும், 2022-23ல் 5. 97 சதவீதமாகவும் காணப்பட்ட நிலையில், ஓன்றிய அரசின் கணக்கை எடுத்துக் கொண்டால், 2021-22ல் 9. 31 ஆகவும், 2022-23ல் 8. 82 ஆகவும் இருக்கிறது.

2021ம் ஆண்டு கணக்கை எடுத்துக் கொண்டால், ஒன்றிய அரசில் பணவீக்கம் 9. 3 சதவீதம், தமிழகத்தைப் பொறுத்தவரை 7. 92%. 2022ல் ஒன்றிய அரசுக்கு 8. 82% ஆக உயர்ந்திருந்த போது தமிழகம் 5. 97 சதவீதமாக இருக்கிறோம். பணவீக்க விகிதாச்சாரத்தை எடுத்துக் கொண்டால், தமிழகம் இந்திய ஒன்றிய அளவைவிட குறைவாக இருக்கிறோம். 2021-22ல் தமிழகத்தில் தனிநபர் வருமானம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 557 ரூபாயாக இருந்தது. 2022-23ல் 1 லட்சத்து 66 ஆயிரத்து 727 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. ஒட்டுமொத்த நாட்டில் தனிநபர் வருமானம், 92 ஆயிரத்து 583 ரூபாயாக இருக்கிறது. ஒன்றிய அளவில் 2022-23ல் 98 ஆயிரத்து 374 ஆக வந்திருக்கிறது.

 

Tags :

Share via