விஷவாயு தாக்கி 2 பேர் பலி ஒப்பந்ததாரர், மேலாளர் கைது

by Staff / 10-09-2023 04:39:51pm
விஷவாயு தாக்கி 2 பேர் பலி ஒப்பந்ததாரர், மேலாளர் கைது

ஆவடி, கிரி நகரில் ஓசிஎப் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கே 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு தற்காலிக ஊழியர்களாக, பட்டாபிராம், பீமாராவ் நகரைச் சேர்ந்த மோசஸ் (45) மற்றும் ஆவடி பஜார் பகுதியை சேர்ந்த தேவன் (50) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை அங்கிருந்த 15 அடி ஆழமுள்ள கழிவு நீர் தொட்டியில், அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணியில், மோசஸ் தேவன் உட்பட நான்கு பேர் ஈடுபட்டிருந்தனர். இதில் விஷவாயு தாக்கி மோசஸ் மற்றும் தேவன் இருவரும் கழிவுநீர் தொட்டிக்குள் மயங்கி விழுந்தனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த மற்ற இருவரும் ஆவடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இருவரையும் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு மருத்துவர்கள் இருவரையும் பரிசோதித்து, இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிந்து, ஒப்பந்ததாரர் சம்பத் மற்றும் மேலாளர் மனோ ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo