ரஷ்ய விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்
ரஷ்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள போஸ்கோவ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 30) அதிகாலை ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 4 விமானங்கள் சேதமடைந்தன. இதற்கு உடனடியாக ரஷ்ய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதை அப்பகுதி கவர்னர் மிகைல் வெடர்னிகோவ் உறுதிப்படுத்தினார். அவர் மேலும் கூறுகையில், ட்ரோன் தாக்குதலின் போது பெரும் தீ விபத்து ஏற்பட்டது. எனினும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று கூறினார்.
Tags :