மதுவுக்கு எதிராக தவெக போராட்டம்.. டாஸ்மாக்கில் புகுந்த நிர்வாகி

கும்பகோணம் காமராஜர் சாலையில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் மதுபான கடை உள்ள நிலையில் இன்னொரு கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெகவினர் போராட்டம் செய்தனர். அப்போது தவெக கட்சி துண்டு அணிந்திருந்த நபர் ஒருவர் டாஸ்மாக் கடைக்குள் நுழைய அவரை போலீசார் தடுத்தனர். அவர் தங்கள் கட்சியை சேர்ந்தவரே இல்லை என்றும் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நடக்கும் சதி எனவும் அங்கிருந்தவர்கள் கூறினர்.
Tags :