மதுரையில் அதிமுகவினுடைய பிரம்மாண்ட மாநாடு தொடங்கியது.

by Admin / 20-08-2023 12:02:57pm
மதுரையில் அதிமுகவினுடைய பிரம்மாண்ட மாநாடு தொடங்கியது.

மதுரையில் அதிமுகவினுடைய பிரம்மாண்ட மாநாடு தொடங்கியது. ஆயிரக்கணக்கான தொண்டர்களின் மத்தியில் அதிமுகவினுடைய கொடியை ஹெலிகாப்டர் வானிலிருந்து மலர்கள் தூவ அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கொடி ஏற்றி  தொடங்கி வைத்தார்.600 கிலோ மலர்கள் அவர் மீது தூவப்பட்டது. கருப்பு - வெள்ளை - சிவப்பு நிற பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. மாநாட்டின் பிரதான நிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்கு தொடங்குகின்றன.

தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிற மதுரையில் அதிமுக எப்பொழுதும் தன்னுடைய பலத்தை நிரூபிக்க  சூழலில் மாநாடுகளை நடத்துவது என்பது எம்ஜிஆர் காலகட்டத்தில் இருந்து நடக்கும் தொடர் நிகழ்வுகள் தான் .தென்னகத்தின் மையமாக இருக்கும் மதுரை அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வருகை புரிந்து மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதற்காகவே இந்த மாநாடு மதுரையில் நடத்தப்படுகிறது

.அதிமுக எடப்பாடி அணி -பன்னீர்செல்வம் அணி என்கிற இரண்டாகப் பிரிந்த பிறகு நடக்கும் முதல் மாநாடு இது .அதிமுகவிலிருந்து பிரிந்த பன்னீர்செல்வம் அண்மையில், திருச்சியில் மாநாட்டை தொடங்கினார் .. தென்பக்கம் உள்ள மக்கள் அதிமுகவிற்கு பக்கபலமாக இருக்கிறார்கள் என்பதை வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சேர்த்துக் கொள்வதற்கு முன்பாக பலம் காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தால், இந்த மாநாடு நடைபெறுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது..

 

Tags :

Share via