லிவ் இன் காதலனின் மகனை கொன்ற காதலி

by Staff / 17-08-2023 02:23:20pm
லிவ் இன் காதலனின் மகனை கொன்ற காதலி

டெல்லியின் இந்திரபுரி பகுதியைச் சேர்ந்தவர் ஜிதேந்தர். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் மகன் திவ்யன்ஷ் (11) ஆகியோரை 2019ஆம் ஆண்டு முதல் பிரிந்து, பூஜா குமாரி (24) என்ற இளம்பெண்ணுடன் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பூஜா குமாரியை விட்டு பிரிந்த ஜிதேந்தர் தன் முதல் மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்தார். ஜிதேந்தரை மீண்டும் அடைய நினைத்த பூஜா குமாரி அவரது மகனை கழுத்தை நெரிந்து கொலை செய்துள்ளார். பூஜா குமாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via