விஜய் அரசியலுக்கு வரவேற்போம் - கே.எஸ். அழகிரி

by Staff / 04-11-2023 12:08:14pm
விஜய் அரசியலுக்கு வரவேற்போம் - கே.எஸ். அழகிரி

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்போம் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “அரசியலுக்கு யார் வந்தாலும் வரவேற்கலாம். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் நாங்கள் வரவேற்போம். யாரையும் அரசியலுக்கு வரக் கூடாது என யாரும் கூறமுடியாது. ரஜினியை இப்படி தான் அரசியலுக்கு வருகிறார் என்று கூறிக் கொண்டே இருந்தார்கள், ஆனால் அவர் வரவில்லை” என தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories