தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை

by Staff / 07-07-2024 03:01:49pm
தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய செல்வப்பெருந்தகை, "பின்புலம் இல்லாமல் எந்த கொலையும் செய்திருக்க முடியாது. அந்த பின்புலத்தையும், உண்மையான குற்றவாளிகளையும் காவல்துறையினர் கண்டுபிடிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் இளைஞர்களின் நம்பிக்கையாக வாழ்ந்தவர். அவர் உடல் புதைக்கப்பட போவதில்லை, விதைக்கப்பட உள்ளார். இன்னும் ஆயிரம் ஆம்ஸ்ட்ராங்கள் உருவாக உள்ளனர்" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via