அதட்டிய ஆசிரியருக்கு கத்தி குத்து

by Staff / 07-07-2024 03:07:30pm
அதட்டிய ஆசிரியருக்கு கத்தி குத்து

அசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் வேதியியல் ஆசிரியராக ராஜேஷ் பருவா பெஜவாடா என்பவர் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வில் 11ஆம் வகுப்பு மாணவன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ராஜேஷ் அந்த மாணவனை அழைத்து, “ஏன் மதிப்பெண் குறைவாக எடுத்திருக்கிறாய்?” என திட்டியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன், தன்னிடம் இருந்த கத்தியால் ஆசிரியரை குத்தினான். இதனால், அங்கிருந்த சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

Tags :

Share via