டிரம்பிடமிருந்து விலகிய எலான் மஸ்க்

by Editor / 29-05-2025 12:55:37pm
டிரம்பிடமிருந்து விலகிய எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, தனக்காக பரப்புரை செய்த எலான் மஸ்கிற்கு DOGE துறையின் தலைவர் பதவி வழங்கினார். அதில், மஸ்க் எடுத்த அரசு பணியாளர்கள் நீக்கம் போன்ற நடவடிக்கைகளால் அமெரிக்காவே கொந்தளித்தது. இந்நிலையில், இன்று (மே 29) எலான் மஸ்க் தனது X தளத்தில், DOGE துறையிலிருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், வாய்ப்பு கொடுத்த டிரம்பிற்கும் நன்றி தெரிவித்துள்ளார். மஸ்க் இந்த பதவியில் 130 நாள் பணியாற்றுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via