2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 6 மாவட்டங்களில் கனமழை

நீலகிரி, கோவை மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று (மே 29) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளைய தினம் (மே 30) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும், திருப்பூர், திண்டுக்கல்லில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
Tags :