தமிழ்நாட்டில் மர்ம காய்ச்சல் - அடுத்தடுத்து மரணம்

by Staff / 15-09-2023 02:18:28pm
தமிழ்நாட்டில் மர்ம காய்ச்சல் - அடுத்தடுத்து மரணம்

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தமிழக மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால், மக்கள் மருத்துவமனையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில், இன்று ஒரே நாளில் மர்ம காய்ச்சலால் 2 பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது மக்கள் மத்தியில் மேலும் பீதியை அதிகரித்துள்ளது. இன்று காலை திருவாரூரில் பயிற்சி மருத்துவர் சிந்து மர்ம காய்ச்சலில் உயிரிழந்த நிலையில், தற்போது திருச்சியில் மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories