பயங்கர விபத்து.. மூவர் சம்பவ இடத்திலேயே பலி

தெலங்கானா மாநிலம், சங்கா ரெட்டி மாவட்டத்தில் பயங்கரமான சாலை விபத்து நடந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார் இரண்டு ஆட்டோக்கள் மீது மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஆட்டோவும், காரும் சுக்குநூறாக நொறுங்கின. விபத்து தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags : பயங்கர விபத்து.. மூவர் சம்பவ இடத்திலேயே பலி