கூடா நட்பு கேடாய் முடியும்".. திமுக - அதிமுக வாக்குவாதம்

by Editor / 26-04-2025 01:21:55pm
கூடா நட்பு கேடாய் முடியும்

தமிழக சட்டப்பேரவையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக - அதிமுகவினர் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என அதிமுகவினரை பார்த்து துணை சபாநாயகர் பிச்சாண்டி சாடியுள்ளார். இதனால் கடுப்பான ஆர்.பி. உதயகுமார், “கூடா நட்பு கேடாய் முடியும் என்பது உங்கள் தலைவர் கலைஞர் சொன்னது” என்றார். அவரைத் தொடர்ந்து, “1999 இல் பாஜகவுடன் நீங்கள் கூட்டணி வைத்திருந்தபோது கூடா நட்பு எப்படி இருந்தது?” என வேலுமணி கேள்வி எழுப்பினார்.
 

 

Tags :

Share via