எப்போ கல்யாணம் என்று கேட்ட முதியவரை கொன்ற நபர்
இந்தோனேஷியாவை சேர்ந்த சிரேகர் (45). இவரது அண்டை வீட்டில் வசித்து வரும் அசிம் இரியாண்டோ (60) என்ற முதியவர், சிரேகரை பார்க்குபோதெல்லாம் எப்போது திருமணம் என கேட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிரேகர், கையில் கட்டையுடன் சென்று அந்த முதியவரை சாலையில் ஓட ஓட தாக்கியுள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலே உயிரிழந்தார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சிரேகரை விசாரித்தபோது அவர் என்னை கேலி செய்ததால் கொலை செய்தேன் என கூறியுள்ளார்.
Tags :



















